இந்தியா

கட்சியின் கொள்கைகளுக்காகவே பணியாற்ற விரும்புகிறேன், பதவிக்காக அல்ல: ராகுல்

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் மூத்த தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து ராகுல் விமர்சித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

DIN

கட்சியின் கொள்கைகளுக்காகவே பணியாற்ற விரும்புகிறேன், பதவிக்காக அல்ல என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சனிக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் மூத்த தலைவர்களின் செயல்பாடுகள் குறித்து ராகுல் விமர்சித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜாதி, மதங்களைக் கடந்து மக்களுக்காவும், கொள்கைகளுக்காவும் மகாத்மா காந்தி போராடினார். இருப்பினும் கடைசிவரை எந்தப் பதவியையும் ஏற்கவில்லை.

சில தலைவர்கள் தங்களின் வாரிசுகளுக்கு பதவியும், வாய்ப்பும் வழங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தினர். ரஃபேல் குற்றச்சாட்டு தொடர்பாக பொதுமக்களிடம் கொண்டு சேர்ப்பதில் மூத்த தலைவர்கள் மெத்தனமாக செயல்பட்டனர் என்று குற்றம்சாட்டியதாக தில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதுபோன்று, பாஜக தொடர்பாக குற்றச்சாட்டுகளை முன்வைத்த போதும், பாஜக-வுக்கு எதிராக செயல்பட்டதிலும் தனது சகோதரர் ராகுல், மூத்த தலைவர்களால் தனித்துவிடப்பட்டதாகவும் அவரது சகோதரி பிரியங்கா வதேராவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆளுங்கட்சி உறுப்பினரின் குடும்பத்தினர் மூவர் சடலமாக மீட்பு! போலீஸார் விசாரணை

இந்திய வீராங்கனைகள் ஸ்மிருதி, ஜெமிமா, ராதாவுக்கு தலா ரூ. 2.25 கோடி; பயிற்சியாளருக்கு ரூ. 22.5 லட்சம்! - மகாராஷ்டிர அரசு

தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா?

விஜய் தலைமையில் இன்று சிறப்பு பொதுக்குழு கூட்டம்!

இந்திய பங்குச் சந்தை இன்று விடுமுறை!

SCROLL FOR NEXT