இந்தியா

கருப்புப் பண மீட்பு: இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஸ்விஸ் அரசு நோட்டீஸ்

DIN

வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தை மீட்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ஸ்விட்சர்லாந்து வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் 25-க்கும் மேற்பட்ட இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஸ்விட்சர்லாந்து அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வரி ஏய்ப்பாளர்களின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் ஸ்விட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில், இந்தியாவைச் சேர்ந்த சில செல்வந்தர்கள் தங்களது கருப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, கருப்புப் பணம் உருவாவதைத் தடுக்கவும், வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்தவும், வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கருப்புப் பணத்தை மீட்கவும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டது. அதற்காக, சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பையும் மத்திய அரசு கோரியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் வங்கிக் கணக்கு விவரங்களை பகிர்ந்து கொள்வது தொடர்பாக, இரு நாடுகளுக்கு இடையே ஏற்கெனவே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதன்படி, கடந்த மார்ச் மாதத்தில் இருந்து 25-க்கும் மேற்பட்ட இந்திய வாடிக்கையாளர்களுக்கு ஸ்விஸ் அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 21-ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் 11 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 
எனினும், இதுதொடர்பாக ஸ்விஸ் அரசு வெளியிட்ட அறிவிக்கையில், வாடிக்கையாளர் பெயரின் முதல் எழுத்துகள், பிறந்த தேதி, எந்த நாட்டைச் சேர்ந்தவர் ஆகிய விவரங்கள் மட்டும் இடம்பெற்றுள்ளன. ஒரு சிலரின் பெயர்கள் மட்டும் முழுமையாக இடம்பெற்றுள்ளன.
இதனிடையே, இந்திய அரசுக்கு வங்கிக் கணக்கு விவரங்களைத் தெரிவிப்பதை எதிர்த்து, சம்பந்தப்பட்ட இந்திய வாடிக்கையாளர்கள் உரிய ஆதாரங்களுடன் 30 நாள்களுக்குள் முறையீடு செய்யலாம். அவர்கள் முறையீடு செய்யத் தவறினால், அவர்களைப் பற்றிய வங்கிகக் கணக்கு விவரங்களை இந்திய அரசுடன் பகிர்ந்து கொள்வதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஸ்விஸ் அரசு முன்னெடுக்கும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

SCROLL FOR NEXT