இந்தியா

ஷஷி தரூர் ஏதோ சொல்கிறார்.. கொஞ்சம் கேளுங்களேன் ப்ளீஸ்!

IANS


புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் பதவியை கட்சித் தலைமை எனக்கு வழங்கினால் அதனை ஏற்கத் தயார் என்று அக்கட்சியின் மூத்தத் தலைவர் ஷஷி தரூர் கூறியுள்ளார்.

மக்களவைக்கான காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை எனக்கு வழங்கினால், அதனை ஏற்க நான் தயார் என்று தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் ஷஷி தரூர் தெரிவித்தார்.

மேலும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தேர்தல் வியூகமான நியாய் மக்களிடம் சரியான முறையில் கொண்டு செல்லப்படவில்லை என்பதையும் ஒப்புக் கொள்ளும் ஷஷி தரூர், ராகுல் தொடர்ந்து கட்சித் தலைமைப் பதவியை வகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

2019 மக்களவைத் தேர்தலில் திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் எம்.பி.யாகியுள்ளார் ஷஷி தரூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லையில் நயினார் நாகேந்திரன் முன்னிலை!

கோவையில் அண்ணாமலைக்கு பின்னடைவு!

மக்களவைத் தேர்தல் நேரலை: பிரஜ்வல் ரேவண்ணா முன்னிலை

மகாராஷ்டிரத்தில் தேஜகூ - இந்தியா இடையே கடும் போட்டி

கேரளம் தபால் வாக்குகள்: காங்கிரஸ் கூட்டணி முன்னிலை!

SCROLL FOR NEXT