இந்தியா

அவதூறு வழக்கு: ஜூன் 12ஆம் தேதி ராகுல் ஆஜராக குஜராத் நீதிமன்றம் உத்தரவு

DIN


அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜூலை 12ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று குஜராத் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ரூ.745.59 கோடி மதிப்பிலான பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கி முறைகேடு செய்து சட்டப்பூர்வமானதாக மாற்றியதாக ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலாவும் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, பொய் குற்றச்சாட்டை முன்வைத்ததாகக் கூறி, ஆமதாபாத் கூடுதல் பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் ராகுலுக்கு எதிராக சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கி அவதூறு வழக்கு தொடுத்தது.
கடந்த திங்கள்கிழமை ராகுல் ஆஜராக வேண்டும் என்று கடந்த மாதம் 9ஆம் தேதி நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. அவரது வழக்குரைஞர் கடந்த திங்கள்கிழமை ஆஜராகி, வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்களை குஜராத்தியிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்க மேலும் சில காலம் தேவைப்படுகிறது. மேலும், கடந்த திங்கள்கிழமை நாட்டின் முதல் பிரதமரான ஜவாஹர்லால் நேருவின் நினைவு தின நிகழ்ச்சியில் ராகுல் பங்கேற்றார். எனவே, ராகுல் காந்தி நேரில் ஆஜராகுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று வாதத்தை முன்வைத்தார்.
அதைத் தொடர்ந்து ராகுல் காந்தி ஜூலை 12ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அன்றைய தினமே ரண்தீப் சுர்ஜேவாலாவும் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியின் இயக்குநர்களில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT