இந்தியா

தொடர்ந்து 5-ஆவது முறையாக முதல்வரானார் நவீன் பட்நாயக்

DIN


ஒடிஸா முதல்வராக பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவர் நவீன் பட்நாயக் (72) புதன்கிழமை பதவியேற்றார். அந்த மாநில முதல்வராக அவர் பதவியேற்பது இது தொடர்ச்சியாக 5ஆவது முறையாகும்.
புவனேசுவரத்தில் உள்ள இட்கோ பொருட்காட்சி மைதானத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் நவீன் பட்நாயக்குக்கு ஆளுநர் கணேஷி லால், பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். நவீன் பட்நாயக்கை தொடர்ந்து, 20 பிஜு ஜனதா தளம் எம்எல்ஏக்கள், அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதில் பிரபுல்லா மாலீக், விக்ரம் கேசரி அருக், நிரஞ்சன் புஜாரி, அருண் சாகு, பிரதாப் ஜேனா, சுஷந்த் சிங், நாபா கிஷோர் தாஸ் உள்ளிட்ட 
11 பேர், கேபினட் அந்தஸ்து கொண்டவர்கள். எஞ்சிய 9 பேர், இணையமைச்சர்கள் ஆவர். அமைச்சரவையில் 2 பெண்களுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளது. 
பிரேமானந்த நாயக், துகுனி சாகு, சமீர் ரஞ்சன் தாஸ், நாபா கிஷோர் தாஸ், பத்மினி தியான், ரகுநந்தன் தாஸ், ஜெகந்நாத் சரகா, ஜோதி பிரகாஷ் பனிகர்ஹி உள்ளிட்ட 10 அமைச்சர்கள், புது முகங்கள். விக்ரம் அருக், பிரதாப் ஜேனா, நிரஞ்சன் புஜாரி, பிரபுல்லா மாலீக், அசோக் சந்திரா பாண்டா, சுஷந்த் சிங் உள்ளிட்டோர் ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்தவர்கள். பத்மநாப பெஹரா, துஷார் காந்தி பெஹரா ஆகியோர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.
புதிய அமைச்சரவையில் 2 பெண் அமைச்சர்கள் உள்ளிட்ட 9 அமைச்சர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்படவில்லை. அவர்களின் பெயர், உஷா தேவி, ஸ்நேகாகினி சுரியா, பத்ரி நாராயண் பத்ரா, எஸ்.என். பட்ரோ, பிரபுல்லா சமல், சஷி பூஷண் பெஹரா, நிருஷிகா சாகு, அனந்த் தாஸ், சந்திர சாரதி பெஹரா ஆகும். 
இதில் எஸ்.என். பட்ரோ, சட்டப்பேரவைத் தலைவராக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒடிஸா முதல்வராக பதவியேற்றதும், சுட்டுரையில் நவீன் பட்நாயக் வெளியிட்ட பதிவுகளில், 5ஆவது முறையாக முதல்வராக இன்று பதவியேற்றுள்ளேன். 4.5 கோடி குடும்ப உறுப்பினர்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மீண்டும் எனக்கு வந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
பதவியேற்பு விழாவில், நவீன் பட்நாயக்கின் சகோதரரும், தொழிலதிபருமான பிரேம் பட்நாயக், சகோதரியும் எழுத்தாளருமான கீதா மேத்தா உள்ளிட்ட ஏராளமான கலைஞர்கள், எழுத்தாளர்கள், பிஜு ஜனதா தளம் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து: ஒடிஸா முதல்வராக பதவியேற்றுள்ள நவீன் பட்நாயக்குக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டின் மீது தீராத வஞ்சனையோடு பாஜக அரசு இருக்கிறது: சு.வெங்கடேசன் எம்.பி.

முதல்வன் பட பாணியில் சிஎஸ்கேவை வம்பிழுத்த பஞ்சாப் அணி!

நகர்ப்புறங்களிலும் 100 நாள் வேலை உறுதித்திட்டம் -பிரியங்கா காந்தி வாக்குறுதி

ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்தார் மம்தா பானர்ஜி!

வெற்றி பெற்றாரா ரத்னம்? - திரைவிமர்சனம்!

SCROLL FOR NEXT