இந்தியா

தாய்லாந்து புறப்பட்டார் பிரதமர் மோடி: ஆசியான், பொருளாதார ஒத்துழைப்பு மாநாடுகளில் பங்கேற்பு

DIN

ஆசியான்-இந்தியா, பிராந்திய அளவிலான பொருளாதார மற்றும் கிழக்கு ஆசியா உள்ளிட்ட மாநாடுகளில் பங்கேற்க பிரதமர் மோடி, தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார். 

16-ஆவது ஆசியான்-இந்தியா மாநாடு, 14-ஆவது கிழக்கு ஆசிய மாநாடு, 3-ஆவது பிராந்திய அளவிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு ஆகியவற்றில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, 3 நாள் அரசு முறைப் பயணமாக தாய்லாந்துக்கு சனிக்கிழமை புறப்பட்டுச் சென்றார்.

பிராந்திய அளவிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு என்ற பெயரில் ஆசியான் அமைப்பைச் சோ்ந்த புரூனே, கம்போடியா, இந்தோனேஷியா, மலேசியா, மியான்மா், சிங்கப்பூா், தாய்லாந்து, பிலிப்பின்ஸ், லாவோஸ், வியத்நாம் ஆகிய 10 நாடுகள், அவற்றின் 6 வா்த்தகக் கூட்டாளிகளான இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகியவற்றுக்கு இடையே தடையற்ற வா்த்தகம் மேற்கொள்வதற்காக முன்மொழியப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வெளியீடு!

ஏப்ரலும் ஷ்ரத்தாவும்!

ஜாமீன் கோரி தில்லி உயர்நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல்!

இந்தியன் - 2 வெளியீட்டுத் தேதி இதுதானா?

தமிழ்ப் படங்களின் பாணியில் சிஎஸ்கேவை கிண்டல் செய்யும் பஞ்சாப்!

SCROLL FOR NEXT