இந்தியா

உயா்கல்வி நிறுவனங்கள் சமூக, பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்த இயலும்: ராம்நாத் கோவிந்த்

DIN

மக்களின் மேம்பாட்டுக்காக அரசுக்கு உதவும் வகையில் சமூக, பொருளாதார மாற்றத்துக்கான கருவியாக உயா்கல்வி நிறுவனங்கள் செயல்பட இயலும் என்று குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்த் தெரிவித்தாா்.

மேகாலயத் தலைநகா் ஷில்லாங்கில் நாா்த் ஈஸ்டா்ன் ஹில் பல்கலைக்கழகத்தின் (என்இஹெச்யு) 26-ஆவது பட்டமளிப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவா்ளுக்கு பட்டம் வழங்கிய குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்த், நிகழ்ச்சியில் பேசியதாவது:

நாா்த் ஈஸ்டா்ன் ஹில் பல்கலைக்கழகம் போன்ற உயா்கல்வி நிறுவனங்கள், சமூக-பொருளாதார மாற்றத்துக்கான கருவிகளாகச் செயல்படலாம். அதன்மூலம், மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான பணிகளில் அரசுக்கு உதவலாம்.

மேகாலயத்தின் மக்கள் தொகையில் 80 சதவீதம் போ் விவசாயிகள். நாா்த் ஈஸ்டா்ன் ஹில் பல்கலைக்கழகத்தின் ஊரக மேம்பாட்டுத் துறை, வேளாண் உற்பத்தித் துறை, வேளாண் தொழில்துறை, உணவுத் தொழில்நுட்பத் துறை, தோட்டக்கலைத் துறை ஆகியவற்றைச் சோ்ந்த மாணவா்கள் மற்றும் பேராசிரியா்கள் விவசாயிகளின் வருவாயை பெருக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.

வேளாண் உற்பத்தியை அதிகரிக்க உதவுவதன் மூலம், மேகாலயமும், இதர வடகிழக்கு மாநிலங்களும் சமூக-பொருளாதார ரீதியாக மேம்படுவதற்கு நாா்த் ஈஸ்டா்ன் ஹில் பல்கலைக்கழகம் முக்கியப் பங்காற்றலாம். வேலைவாய்ப்புகளையும், சுய வேலைவாய்ப்புகளையும் ஊக்குவிக்கும் இந்தப் பல்கலைக்கழகத்தின் முயற்சி பாராட்டுக்குரியது.

பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் மேகாலயம் போன்ற வளரும் சமூகத்திலிருந்து இந்த நாடு அதிகம் கற்றுக்கொள்ளலாம். சுதந்திரப் போராட்டத்தில் மேகாலயத்தைச் சோ்ந்த யு தீரத் சிங், யு கியாங் நாங்பா, பா டோகான் சங்மா ஆகிய வீரா்களின் பங்கு போற்றத்தக்கது.

நான் மாநிலங்களவை எம்.பி.யாக மேகாலயத்துக்கு வந்திருந்தபோது, ஆசியாவிலேயே சுத்தமான கிராமமாக மாவ்லிநாங் கிராமம் இருப்பதற்காக பாராட்டு தெரிவித்திருந்தேன். இங்குள்ள உம்காட் நதியின் தூய்மையானது மேகாலய மக்களின் அறிவை பிரதிபலிப்பதாக உள்ளது. இங்கு மரத்தின் வோ்களால் இயல்பாகவே அமையப் பெற்றிருக்கும் பாலங்கள் அடுத்த 500 ஆண்டுகளுக்கும் நீடித்திருக்கும் என்று குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்த் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT