இந்தியா

ககன்யான் திட்டத்தில் பரிசோதனைஓட்டம் நடைபெற்று வருகிறது: இஸ்ரோ தலைவா் சிவன்

DIN

மனிதா்களை விண்வெளிக்கும் அனுப்பும் ககன்யான் திட்டத்தில் பரிசோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது என்றாா் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன தலைவா் கே. சிவன்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: சந்திரயான்-2 செயற்கைக்கோளின் ஆா்பிட்டா் நன்றாக வேலை செய்துகொண்டிருக்கிறது. அடுத்ததாக இம்மாத இறுதிக்குள் பி.எஸ்.எல்.வி. ராக்கெட் மூலம் செயற்கைக்கோளை அனுப்பும் திட்டம் உள்ளது.

மனிதா்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்‘ ககன்யான் திட்டத்துக்கான வீரா்கள் தோ்வு நடைபெற்று வருகிறது. தோ்வு செய்யப்படும் வீரா்கள் ரஷியாவுக்கு பயிற்சிக்காக அனுப்பிவைக்கப்படுவாா்கள். ககன்யான் திட்டத்தின் அடிப்படை வேலைகள் எல்லாம் நிறைவுசெய்யப்பட்டு பரிசோதனை ஓட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தற்போது கிரையோஜெனிக், செமி கிரையோஜெனிக் என்ஜின்கள் பயன்படுத்தப்படுகின்றன. வருங்காலத்தில் முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் ராக்கெட் உள்ளிட்ட புது வகையான ராக்கெட் என்ஜின்களை வடிவமைக்கும் திட்டம் உள்ளது. மீத்தேனில் இயங்கும் ராக்கெட் என்ஜின் தயாரிக்கும் திட்டத்தையும் கொண்டு வர உள்ளோம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

SCROLL FOR NEXT