இந்தியா

தேவேந்திர ஃபட்னவீஸ் - சிவசேனை அமைச்சர்கள் சந்திப்பு: ஆனால் அரசியல் பேசவில்லையாம்..

DIN


விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சிவசேனை கட்சியின் அமைச்சர்கள் 6 பேர் பங்கேற்றனர்.

மகாராஷ்டிராவில் பெய்த கன மழை காரணமாக அங்கு விவசாய நிலங்கள் பலத்த சேதங்களைச் சந்தித்துள்ளன. இந்நிலையில் இதுதொடர்பாக முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தலைமையில் சாயாத்ரி விருந்தினர் மாளிகையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், சிவசேனையைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் ராம்தாஸ் கதம் உட்பட 6 அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்துக்குப் பிறகு சிவசேனை தலைவர் ராம்தாஸ் கதம் தெரிவிக்கையில்,

"இது விவசாயிகள் பிரச்னை தொடர்பான கூட்டம். விவசாயிகள் பிரச்னைக்காக சிவசேனை முன்வரவில்லை என்று எதிர்காலத்தில் யாரும் சொல்லிவிடக் கூடாது. அதனால்தான் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றோம். விவசாயிகளுக்கு உடனடியாக ஒரு ஏக்கருக்கு ரூ. 25,000 இழப்பீடு தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்" என்றார்.

மகாராஷ்டிரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மாநில அரசு ஏற்கெனவே ரூ. 10,000 கோடியை ஒதுக்கியுள்ளது. ஃபட்னவீஸும் கடந்த ஞாயிற்றுக்கிழமை அகோலா மாவட்டத்தில் உள்ள கிராமங்களுக்குச் சென்று சேதமடைந்த பயிர்களைப் பார்வையிட்டு, விவசாயிகளுடன் உரையாடினார். மேலும், விவசாயிகள் துரிதமாக உதவியைப் பெறுவதற்காக காப்பீடு நிறுவனத்துக்கும், விவசாயிகளுக்கும் இடையே அதிகாரிகள் மத்தியஸ்தராக செயல்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக - சிவசேனை கூட்டணி வெற்றி பெற்றபோதிலும், அங்கு இன்னும் அரசு அமைப்பதில் இழுபறி நீடிக்கிறது. சுழற்சி முறையில் முதல்வர் பதவி மற்றும் ஆட்சியில் சமபங்கு என்ற சிவசேனையின் கோரிக்கைகளை ஏற்க பாஜக மறுத்து வருகிறது. இதனால், இரண்டு கட்சிகளுக்கிடையே இன்னும் உடன்பாடு எட்டப்படாத நிலை நீடிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

SCROLL FOR NEXT