இந்தியா

ஜன்னல் வைக்க ரூ.73 லட்சமா? ஜகன்மோகனின் ஊதாரித்தனத்தை சாடும் தெலுங்கு தேசம்! கொஞ்சம் ஓவராத்தான் இருக்கோ?

DIN


அமராவதி: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, தனது அதிகாரப்பூர்வ வீட்டில் ஜன்னல் வைக்க செய்த செலவுதான், ஆந்திர அரசியல்வட்டாரத்தில் இப்போது புயலாகக் கிளம்பியுள்ளது.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டில் ஜன்னல் வைக்க பல லட்சம் செலவிடப்பட்டிருப்பது குறித்து சந்திரபாபு நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டுத் தாக்கியுள்ளார்.

அந்த டிவிட்டர் பக்கத்தில், ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசு, அவருடைய புதிய வீட்டில் ஜன்னல் பொருத்த ரூ.73 லட்சத்தை ஒதுக்கியுள்ளது. தற்போதைய அரசின் சூப்பர் எக்ஸ்பென்சிவ்வாக இது மாறியுள்ளது. கடந்த 5 மாதங்களாக நடைபெற்ற திறமையற்ற நிதி நிர்வாகத்துக்கு இதுவே சாட்சியாக உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

இது மட்டுமல்லாமல், பல்வேறு அரசுப் பணிகள் குறித்தும் சந்திரபாபு நாயுடு பதிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு, ஜுன் மாதம் அவர் இருக்கும் வீட்டுக்கு சாலை போடவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்க, ஹெலிபேட் அமைக்க என ரூ.1.895 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT