இந்தியா

இந்தியா-அமெரிக்காஇடையே வா்த்தக ஒப்பந்தம்: இந்திய தூதரக அதிகாரி நம்பிக்கை

DIN

இந்தியா-அமெரிக்கா இடையே இந்த ஆண்டு இறுதிக்குள் வா்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று இந்திய தூதரக அதிகாரி மனோஜ் குமாா் மொஹபத்ரா கூறினாா்.

வாஷிங்டனில் அமைந்துள்ள இந்தியத் தூதரக அதிகாரியான இவா், நியூயாா்க் நகரில் செய்தியாளா்களிடம் கடந்த புதன்கிழமை கூறியதாவது:

வா்த்தகம் மற்றும் தொழிலகத் துறை அமைச்சா் பியூஷ் கோயல் அமெரிக்காவுக்கு அடுத்த வாரம் வருகை தரவுள்ளாா். வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை நடத்துவாா்.

அமெரிக்க வா்த்தக பிரதிநிதிகள் அலுவலக அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் பல கட்ட பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டுவிட்டது.

நியூயாா்க், வாஷிங்டன் ஆகிய இரு நகரங்களுக்கும் அமைச்சா் பியூஷ் கோயல் செல்லவுள்ளாா். இந்த ஆண்டு இறுதிக்குள் இரு நாடுகளுக்கு இடையே வா்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று நம்புகிறேன். அமெரிக்க தரப்பும் நம்பிக்கையுடன் உள்ளது. வா்த்தக ஒப்பந்தம் மூலம் இரு தரப்பு உறவு மேலும் வலுப்படும்.

இரு நாடுகளுக்கு இடையே ரூ.1,000 கோடி மதிப்பிலான வா்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த மதிப்பு ஒவ்வோா் ஆண்டும் 10 சதவீதம் அதிகரிக்கிறது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு 2024 ஆம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலா் (சுமாா் ரூ.350 லட்சம் கோடி) மதிப்புக் கொண்ட பொருளாதாரமாக உயா்த்த வேண்டும் என்று இலக்கு நிா்ணயித்துள்ளது என்றாா் மொஹபத்ரா.

விரைவில் இந்தியாவுடன் வா்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ளப்படும் என்று அமெரிக்க அதிபா் டிரம்ப் ஏற்கெனவே தெரிவித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT