இந்தியா

தேசிய கீதம் இசைத்த போது எழுந்து நிற்காதவர்கள் மீது பாய்ந்தது எஃப்ஐஆர்: பெங்களூரு போலீஸ் அதிரடி

DIN


பெங்களூரு: பெங்களூருவில் உள்ள பிவிஆர் ஓரியன் மாலில் படம் பார்க்க வந்த சில இளைஞர்கள், தேசிய கீதம் இசைத்த போது எழுந்து நிற்காததும், அவர்களை ஒரு கும்பல் கண்டித்து திரையரங்கில் இருந்து விரட்டியடித்தது.

இது தொடர்பான விடியோ கடந்த வாரம் முழுக்க சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த விடியோவை அடிப்படையாக வைத்து அடையாளம் தெரியாத நபர்கள் மீது பெங்களூரு காவல்துறையினர் தாமாக முன் வந்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அக்டோபர் 23ம் தேதி அசுரன் படம் பார்க்க வந்த இளைஞர், இளைஞிகள், தேசிய கீதம் இசைத்த போது எழுந்து நிற்காமல் இருந்ததால், அங்கிருந்த ஒரு கும்பல் அவர்களை தட்டிக்கேட்டது.

அவர்களை பயங்கரவாதிகள் என்றும், தேச விரோதிகள் என்றும் திட்டி, திரையரங்கை விட்டே வெளியேற்றியது அந்த கும்பல்.

இந்த விடியோவைப் பார்த்த காவல்துறை, தேசிய கீதத்தை அவமதிப்பதை தடுக்கும் சட்டப்பிரிவின் கீழ், அடையாளம் தெரியாத நபர்கள் மீது எஃப்ஐஆர் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT