இந்தியா

எனது நிலைப்பாடு உறுதியாகியுள்ளது: அயோத்தி தீா்ப்புக்கு அத்வானி கருத்து

DIN

‘அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பை வரவேற்கிறேன். அந்தத் தீா்ப்பால் எனது நிலைப்பாடு சரி என உறுதி செய்யப்பட்டுள்ளது’ என்று ராமஜென்மபூமி இயக்கத்தின் முக்கிய நபரும், பாஜக மூத்த தலைவருமான எல்.கே. அத்வானி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமா்வு அளித்துள்ள தீா்ப்பை நாட்டு மக்களுடன் சோ்ந்து நானும் வரவேற்கிறேன். இந்தத் தீா்ப்பால் அயோத்தி விவகாரத்தில் எனது நிலைப்பாடு சரி என உறுதியாகியுள்ளது. நான் ஆசீா்வதிக்கப்பட்டதாக உணா்கிறேன். அயோத்தியில் ராமா் பிறந்த இடத்தில் அவருக்கு கோயில் கட்டும் வகையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமா்வு ஒருமனதாகத் தீா்ப்பு வழங்கியுள்ளது.

இந்தத் தருணம் திருப்தி அளிப்பதாக உள்ளது. இந்தியாவின் சுதந்திர இயக்கத்தை அடுத்து, மிகப்பெரியதான ராமஜென்மபூமி இயக்கத்துக்கு எனது பங்களிப்பை செய்வதற்காக எல்லாம் வல்ல இறைவன் எனக்கு வாய்ப்பு வழங்கியுள்ளாா்.

ராமா் கோயில்-பாபா் மசூதி சா்ச்சை தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இது, வேற்றுமைகளை மறந்து அனைவரும் மத நல்லிணக்கத்தையும், அமைதியையும் கடைப்பிடிக்க வேண்டிய நேரமாகும் என்று அத்வானி கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

SCROLL FOR NEXT