முகப்பு
இந்தியா

தமிழன்டா என்று காலரைத் தூக்கி விடுபவரா நீங்கள்? உங்களுக்காக டைட்டனின் புதிய வாட்ச் இது

தமிழன்டா என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்பவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கே உங்களுக்காக டைட்டன் நிறுவனம் புதிய கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:09 PM
New Namma Tamilnadu Watch
பகிர்:

புது தில்லி: தமிழன்டா என்று காலரைத் தூக்கி விட்டுக் கொள்பவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கே உங்களுக்காக டைட்டன் நிறுவனம் புதிய கைக்கடிகாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மாற்றி யோசி என்பது எப்போதும் தொழில் நிறுவனங்களின் தாரக மந்திரமாக இருக்கும். அந்த வகையில் டைட்டன் யோசித்ததில் உதயமாகியிருக்கிறது தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கைக்கடிகாரம்.

ரோஸ் தங்கத்தால் கைக்கடிகாரத்துக்குள் தமிழ் எழுத்துக்களில் இரண்டு, ஆறு என பொறிக்கப்பட்டிருக்கிறது.

காஞ்சிபுரம் பட்டுப் புடவையில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு வெளியானதைப் பார்த்ததும் அசந்துவிட்டேன். அதை அடிப்படையாக வைத்தே இந்த கைக்கடிகாரத்தை உருவாக்கினேன் என்கிறார் வடிவமைப்பாளர்.

இந்த கைக்கடிகாரங்களின் விலை ரூ.4,495 முதல் ரூ.6,995 வரை விற்பனையில் உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து டைட்டன் ஷோரூம்களிலும் இந்த வாட்ச் விற்பனைக்கு வந்துள்ளது.

இதுவரை தமிழ் வாழ்க, தமிழா என்று பொறிக்கப்பட்ட டீ ஷர்ட்டுகளை மட்டுமே அணிந்து பரவசம் அடைந்தவர்கள், இனி தமிழ் பொறித்த கைக்கடிகாரங்களையும் அணிந்து மகிழலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.