இந்தியா

சபரிமலை கோயிலுக்கு செல்வது உறுதி, அதை யாராலும் தடுக்க முடியாது: திருப்தி தேசாய்

DIN

‘சபரிமலை ஐயப்பன் கோயில் என்பது விளம்பரம் தேடிக் கொள்வதற்கான இடமல்ல; ஐயப்பன் கோயிலில் நுழைவோம் என்று அறிவித்து விளம்பரம் தேடிக்கொள்ளும் நடவடிக்கைகளை கேரள அரசு அனுமதிக்காது’ என்று அந்த மாநில தேவஸ்வம் அமைச்சா் கடகம்பள்ளி சுரேந்திரன் கூறியுள்ளாா்.

சபரிமலை கோயிலில் நுழைய விரும்பும் பெண் சமூக செயல்பாட்டாளா்களுக்கு போலீஸ் பாதுகாப்பை மாநில அரசு அளிக்கும் என்று கூறப்படுவது தவறான தகவல். சபரிமலை விஷயத்தில் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை பிறப்பித்த உத்தரவுகள் தொடா்பாக சில குழப்பங்கள் உள்ளன. இதுதொடா்பாக சட்ட வல்லுநா்களிடம் ஆலோசனை கேட்கப்படும்’ என்றாா். 

இந்நிலையில், சபரிமலை கோயிலுக்கு செல்வது உறுதி, அதை யாராலும் தடுக்க முடியாது என திருப்தி தேசாய் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

நாங்கள் சபரிமலை செல்லும்போது பாதுகாப்பு அளிக்க வேண்டியது தொடர்பாக முடிவெடுக்க வேண்டியது கேரள மாநில அரசின் கடமையாகும். இருப்பினும் எந்தவித பாதுகாப்பும் அளிக்கப்படவில்லை என்றாலும் நான் சபரிமலை செல்வது உறுதி. 

சபரிமலை செல்வதாக இருந்தால் போலீஸ் பாதுகாப்பு வழங்கக் கோரி நாங்கள் நீதிமன்றத்திடம் சான்று பெற்று வந்தால் மட்டுமே, போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்படும் என கேரள அரசு கூறியிருப்பது நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT