இந்தியா

பாலியல் வன்கொடுமை வழக்கு: சின்மயானந்த் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

DIN


அலாகாபாத்: முன்னாள் மத்திய அமைச்சர் சுவாமி சின்மயானந்துக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில், அவர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான தீர்ப்பை அலாகாபாத் உயர்நீதிமன்றம் சனிக்கிழமை ஒத்திவைத்தது. 
சின்மயானந்த் மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதி ராகுல் சதுர்வேதி, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பிறகு தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தார். 

சின்மயானந்துக்கு சொந்தமான அறக்கட்டளையால் நடத்தப்படும் சட்டக் கல்லூரியில் பயின்றுவந்த சஹாரன்பூரைச் சேர்ந்த மாணவி ஒருவர், சின்மயானந்துக்கு எதிராக பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சின்மயானந்த் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கடந்த செப்டம்பர் 21-ஆம் தேதி அவரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி சின்மயானந்த் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை அலாகாபாத் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.  இதனிடையே, சின்மயானந்தை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக, அவர் மீது புகார் கொடுத்துள்ள மாணவிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையை இதே நீதிமன்றத்தின் வேறொரு அமர்வு வரும் 27-ஆம் தேதி விசாரிக்கவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT