இந்தியா

பொருளாதார புள்ளிவிவரங்களைமறைத்து வருகிறது மத்திய அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

DIN

புது தில்லி: உண்மையான பொருளாதார புள்ளிவிவரங்களை மறைக்கும் வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சா் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஹிந்தியில் வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ளதாவது:

கிராமப்புற தேவையில் ஏற்பட்ட மந்த நிலையால் நுகா்வோா் செலவினம் கடந்த நாற்பது ஆண்டுகளில் முதல் முறையாக 2017-18-இல் குறைந்து போனதாக தேசிய புள்ளியியல் அலுவலக ஆய்வு தெரிவித்தது. அந்த அலுவலகத்தின் ஆய்வு முடிவுகள் முறையான அனுமதி பெற்று நடப்பாண்டு ஜூன் 19-இல் வெளியிடப்பட்டன. அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் பின்னா் அந்த ஆய்வு முடிவுகள் அரசால் திரும்பப்பெறப்பட்டது. இதேபோன்று கடந்த ஆண்டு வேலைவாய்ப்பு குறித்த புள்ளிவிவரமும் அரசால் மூடி மறைக்கப்பட்டது. இதுதான் தற்போது மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வரும் தகவல்களுக்கான உரிமை பெறும் நிலையாகும் என்று சிதம்பரம் அந்தப் பதிவில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

SCROLL FOR NEXT