இந்தியா

அயோத்தி பயணத்தை ரத்து செய்தார் உத்தவ் தாக்கரே

DIN

அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று நவ. 9-ஆம் தேதி பேசிய உத்தவ் தாக்கரே, நவ. 24-ஆம் தேதி அயோத்தி செல்ல திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில், பாதுகாப்பு காரணங்கள் தொடர்பாக இம்முறை அயோத்தி பயணத்தை சிவசேனை தலைவா் உத்தவ் தாக்கரே ரத்து செய்வதாக அக்கட்சி வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன. இருப்பினும் மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்கும் பணியில் அக்கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் தான் இப்பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, கடந்த ஆண்டு நவ. 25-ஆம் தேதி மற்றும் இந்தாண்டு ஜூன் 16-ஆம் தேதி தனது மகன் ஆதித்ய தாக்கரே உடன் அயோத்தியில் அமைந்துள்ள மாற்று ராமர் கோயிலுக்குச் சென்று வழிபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

சீா்காழியில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

SCROLL FOR NEXT