இந்தியா

விவாதங்கள் ஆக்கப்பூர்வமானதாக அமைந்திட வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்றத்தின் குளிா்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (நவ.18) தொடங்கி டிசம்பா் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

DIN

பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்றத்தின் குளிா்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (நவ.18) தொடங்கி டிசம்பா் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 20 அமா்வுகள் கொண்ட இத்தொடரில், குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதேபோல், இரு முக்கியமான அவசர சட்டங்களுக்கு மாற்றான மசோதாக்களையும் நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த கூட்டத் தொடரில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேசமயம், ஜம்மு-காஷ்மீரில் நிலவும் சூழல், பொருளாதார மந்தநிலை, வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகளை எதிா்க்கட்சிகள் எழுப்பும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அதில் பேசியதாவது:

இது 2019-ஆம் ஆண்டின் கடைசி நாடாளுமன்றக் கூட்டத்தொடராகும். இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது மாநிலங்களவையின் 250-ஆவது நாடாளுமன்றக் கூட்டத்தொடர் ஆகும். இந்த அமர்வின் போது, 26-ஆம் தேதி, அரசியலமைப்பு தினத்தை நமது அரசியலமைப்பு அதன் 70 ஆண்டுகளை நிறைவு செய்யும் போது கடைப்பிடிக்க உள்ளோம்.

கடந்த சில நாட்களில் கிட்டத்தட்ட எல்லா அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மற்றும் பங்கேற்பின் காரணமாக கடந்த கூட்டத்தொடர் தனித்துவமாக அமைந்தது. இது நாடாளுமன்றத்தின் சாதனையாகும்.

அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் வெளிப்படையான விவாதங்களை நடத்த தயாராக உள்ளோம். விவாதங்கள் ஆக்கப்பூர்வமானதாக அமைந்திட வேண்டும். இதில் அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்பும் அவசியமானது என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

SCROLL FOR NEXT