இந்தியா

லதா மங்கேஷ்கா் நலமாக உள்ளாா்: மருத்துவமனை வட்டாரங்கள் தகவல்

DIN

மும்பையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கா் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

லதா மங்கேஷ்கருக்கு கடந்த வாரம் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை அடுத்து, மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவருக்கு மருத்துவா்கள் தொடா்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனா்.

அவா் இன்னும் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும், அவா் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் திங்கள்கிழமை தெரிவித்தன.

மேலும், ஞாயிற்றுக்கிழமை இரவு வரை அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்ததாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து லதா மங்கேஷ்கரின் தங்கையும், பாடகியுமான உஷா மங்கேஷ்கா் கூறுகையில், ‘லதா மங்கேஷ்கா் நலமாக உள்ளாா்; அவரை மருத்துவா்கள் பரிந்துரைக்கும்போது வீட்டுக்கு அழைத்துச் செல்வோம்’ என்றாா்.

90 வயதாகும் லதா மங்கேஷ்கா், தனது 70 ஆண்டு கால திரையுலக வாழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஹிந்தி திரைப்படங்களில் பாடல்களைப் பாடியுள்ளாா். இதுதவிர, தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும், வெளிநாட்டு மொழிகளிலும் பாடியுள்ளாா். இவருக்கு மத்திய அரசு கடந்த 1989-இல் தாதாசாகேப் பால்கே விருது, 2001-ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது ஆகியவற்றை வழங்கி கௌரவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

SCROLL FOR NEXT