இந்தியா

திருநங்கைகளுக்கு பொது கழிப்பறை வசதி: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கோரிக்கை

DIN

நாடாளுமன்றத்தின் குளிா்கால கூட்டத் தொடா் திங்கள்கிழமை (நவ.18) தொடங்கி டிசம்பா் 13-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது, தற்போது புதிதாக அமைந்துள்ள 17-ஆவது மக்களவையின் 2-ஆவது கூட்டத்தொடராகும். 

இந்நிலையில், மக்களவையில் 2-ஆம் நாள் அவை நடவடிக்கையின் போது திருநங்கைகளுக்கான பொது கழிப்பறை வசதி தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. பிரதிமா மோண்டல் வலியுறுத்தினார். அதில் அவர் பேசியதாவது, பொது கழிப்பிட வசதி அனைவருக்கும் மிக முக்கியமானது. ஆனால், இது திருநங்கைகள் உள்ளிட்ட 3-ஆம் பாலினத்தவருக்கு பெரும் பிரச்னையாக உள்ளது. 

ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனி கழிவறை வசதிகள் இருக்கும்போதிலும், பாலின சம உரிமையை பாதுகாக்கும் விதமாக திருநங்கைகளுக்கான பொது கழிவறை வசதியை மத்திய அரசு உடனடியாக நாடெங்கிலும் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். 

உலகளாவிய கழிவறை நெருக்கடியை சரிசெய்யும் நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் சார்பாக நவம்பர் 19 அன்று உலக கழிவறை தினம் அனுசரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT