கொல்கத்தாவில் கொட்டிய பணமழை: ஜன்னல் வழியாக வீசப்பட்ட 2000, 500, 100 ரூபாய் நோட்டுகள்
ஒரு அடுக்குமாடியின் 6வது தளத்தில் இருந்த தனியார் நிறுவனத்தில் நடைபெறவிருந்த சோதனைக்கு பயந்து, கத்தைக் கத்தையாக ரூபாய் நோட்டுகளை ஜன்னல் வழியாக வீசப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொல்கத்தா: ஒரு அடுக்குமாடியின் 6வது தளத்தில் இருந்த தனியார் நிறுவனத்தில் நடைபெறவிருந்த சோதனைக்கு பயந்து, கத்தைக் கத்தையாக ரூபாய் நோட்டுகளை ஜன்னல் வழியாக வீசப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை மதியம் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அவ்வழியாகச் சென்றவர்கள், வானத்தில் இருந்து பணமழைப் பொழிவதைப் பார்த்து அதிர்ச்சியும், அதே சமயம் ஆனந்தமும் அடைந்தனர்.
மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், அந்த கட்டத்தின் 6வது தளத்தில் இயங்கி வந்த ஏற்றுமதி - இறக்குமதி நிறுவனத்தில், வரி மோசடி நடப்பதை அறிந்து, அங்கு சோதனையில் ஈடுபடச் சென்றனர்.
Advertisement
அப்போது நிறுவனத்தில் இருந்த கணக்கில் வராத பணத்தை என்ன செய்வது என்று தெரியாத நிர்வாகத்தினர், பணத்தை ஜன்னல் வழியாக வெளியே கொட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
வருவாய் புலனாய்வுப் பிரிவு சோதனைக்கும், இந்த பணமழைக்கும் தொடர்பிருக்கிறதா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
என்னவாக இருந்தாலும், அந்த கட்டத்தின் கீழே நடந்து சென்றவர்களுக்கு நேற்று கொண்டாட்டம்தான்.