இந்தியா

தெலங்கானா எம்.எல்.ஏவின் இந்தியக் குடியுரிமை ரத்து! காரணம் என்ன?

DIN

தெலங்கானா எம்.எல்.ஏ ரமேஷ் சென்னமனேணி-யின் இந்தியக் குடியுரிமையை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பொது நலனுக்காக எம்.எல்.ஏவின் குடியுரிமை ரத்து செய்யப்படுவதாக உள்துறை அமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது.

தெலங்கானா ராஷ்டிரிய சமிதி  எம்.எல்.ஏ ரமேஷ் சென்னமனேணி  ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர். கடந்த 2007ம் ஆண்டு இவர், இந்தியக் குடியுரிமையை பெற்றார். ஆனால், போதிய விபரங்கள் மற்றும் ஆவணங்கள் அளிக்காமல் முறைகேடாக குடியுரிமை பெற்றுள்ளது அரசுக்கு பின்னரே தெரிய வந்தது. அவரது உண்மையான ஆவணங்கள் வெளிநாட்டில் மறைத்து வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து உண்மையான ஆவணங்களை மறைத்து மோசடி செய்து குடியுரிமை பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கில் தெலங்கானா நீதிமன்றம் எம்.எல்.ஏவுக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கியது. இருந்தபோதிலும் மத்திய உள்துறை அமைச்சகம் ரமேஷின் குடியுரிமையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. குடியுரிமை கேட்டு விண்ணப்பிப்பதற்கு ஒரு வருடத்திற்கு முன்னதாக அவர் இந்தியாவில் வசிக்கவில்லை என்பதாலும், பொதுநலன் கருதியும் அவரது குடியுரிமை ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் தெரிவித்துள்ளது.

ரமேஷ் சென்னமனேணி கடந்த 2009 முதல் எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார். பின்னர் 2010ல் சந்திரசேகர் ராவின் கட்சியில் இணைந்து 2014 மற்றும் 2018 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று தொடர்ந்து 9 ஆண்டுகள் எம்.எல்.ஏ பதவி வகித்து வருகிறார். இந்தியக் குடியுரிமை ரத்து செய்யப்பட்டதன் மூலம் அவர் தனது எம்.எல்.ஏ பதவியை இழக்கிறார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT