மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் ஒரே அறையில் 5 வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தும் அவலம் அரங்கேறுகிறது.
மத்தியப் பிரதேச மாநிலம், போபால் மாவட்டம் சரோதிபுரத்தில் ஆரம்பப் பள்ளி ஒன்று உள்ளது. அடிப்படை வசதிகளே இல்லாத ஒரு நிலையில் இந்தப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த தொடக்கப் பள்ளியில் மின்சார வசதி இல்லை; குடிநீர் முறையாக இல்லை. கழிவறை வசதிகளும் இல்லை.
மேலும், 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையுள்ள இந்தப் பள்ளியில் இருக்கும் ஒரே ஒரு அறையில் 5 வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் பாடம் நடத்தப்படுகிறது. பள்ளியை தரம் உயர்த்த மத்திய அரசு உதவ வேண்டும் என்று அந்தப்பள்ளியின் ஆசிரியர் அனூப் கோரிக்கை விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.