இந்தியா

இங்கு மட்டும் ஒரு கிலோ வெங்காயம் ரூ.25 தானாம்! அதுவும் முதல்வரின் ஏற்பாடாம்!!

DIN

விஜயவாடா: ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் அறிவுறுத்தலின்படி, வெள்ளியன்று உழவர் சந்தையில் வெங்காயத்துக்கு என தனி மையங்கள் அமைக்கப்பட்டன.

அனைத்து மையங்களிலும் ஒரு கிலோ வெங்காயம் ரூ.25 மட்டும்தான். ஆனால் அதற்காக கிலோ கிலோவாக வாங்கிக் கொள்ளலாம் என்று நினைக்க வேண்டாம். இங்கே ஒருவருக்கு ஒரு நாளைக்கு ஒரு கிலோ வெங்காயம் மட்டுமே விற்பனை செய்கிறார்கள்.

அதுவும் காலை 8 முதல் 10 மணி வரையும், மாலை 4 முதல் 6 மணி வேரை மட்டுமே இந்த மையங்கள் செயல்படும்.

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்திருக்கும் நிலையில், உழவர் சந்தைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யுமாறு முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இங்கு வெங்காயத்தை வாங்கிச் செல்ல ஏராளமான பொதுமக்கள் பல்வேறு இடங்களில் இருந்தும் வந்து வாங்கிச் செல்வதாக அதிகாரிகள் கூறுகிறார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரிடம் வழிப்பறி: சிறுவன் உள்பட 4 போ் கைது

பெருங்களத்தூா் - செங்கல்பட்டு பறக்கும் சாலை திட்டத்தைக் கைவிடக்கூடாது: ராமதாஸ்

குண்டு மல்லி விலை வீழ்ச்சி: விவசாயிகள் வேதனை

மின் தடை: பொதுமக்கள் போராட்டம்

புதுச்சேரியில் அனுமதியின்றி செயல்படும் விடுதிகளுக்கு சீல் வைக்கப்படும்: நகராட்சி ஆணையா் எச்சரிக்கை

SCROLL FOR NEXT