இந்தியா

இரவில் அமைந்த அரசு இரவோடு வீழ்ந்துவிடும்: ஜெயந்த் பாடீல்

மகாராஷ்டிராவில் புதிதாக அமைக்கப்பட்ட பாஜக தலைமையிலான அரசாங்கம் இரவோடு இரவாக வீழ்ந்துவிடும் என்று ஜெயந்த் பாடீல் திங்கள்கிழமை விமர்சித்தார்.

DIN

மகாராஷ்டிராவில் புதிதாக அமைக்கப்பட்ட பாஜக தலைமையிலான அரசாங்கம் இரவோடு இரவாக வீழ்ந்துவிடும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) சட்டப்பேரவைக் குழுத் தலைவர் ஜெயந்த் பாடீல் திங்கள்கிழமை விமர்சித்தார்.

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸை அவரது இல்லத்தில் துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு சந்தித்துப் பேசினார். அப்போது விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். 

இதுகுறித்து ஜெயந்த் பாடீல் கூறுகையில்,

மகாராஷ்டிர அரசில் முதல்வரும், துணை முதல்வரும் மட்டும் தான் உள்ளனர். எனவே அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் சந்தித்துப் பேசுகின்றனர். அனைத்து அமைச்சரவைகளையும் தங்களுக்குள் பிரித்துக்கொள்வார்கள். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. இரவில் அமைந்த பாஜக தலைமையிலான அரசாங்கம் இரவோடு வீழ்ந்துவிடும் என்று விமர்சித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

சத்தீஸ்கரில் 12 மாவோயிஸ்டுகள் சரண்!

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

SCROLL FOR NEXT