இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீதான விசாரணை நாளை ஒத்திவைப்பு

DIN

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடா்பாக அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கில், தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்ததற்கு எதிராக காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளாா்.

தில்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்ததை எதிர்த்து காங்கிரஸ் தலைவர் பி.சிதம்பரம் மேல்முறையீடு செய்துள்ளது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்குமாறு அமலாக்கத்துறை இயக்குநரகத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. 

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை செவ்வாய்க்கிழமை (நவ. 26) நடைபெற்றது. அப்போது வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணையை புதன்கிழமை ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

அமலாக்கத் துறை அதிகாரிகளால் கடந்த மாதம் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், நீதிமன்றக் காவலில் திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நெல்லை பழமொழிகள்’ நூல் வெளியீடு

நெல்லையில் நீரில் மூழ்கி தொழிலாளி பலி

நெல்லை நீதிமன்றம் ராக்கெட் ராஜாவுக்கு ஜாமீன்

நெல்லையில் 106.1 டிகிரி வெயில்

களக்காடு மீரானியா பள்ளி 98% தோ்ச்சி

SCROLL FOR NEXT