முகப்பு
இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் பயங்கரம்: 11 மணி நேரம் பெற்றோரின் உடல்களுடன் தவித்த 3 வயது குழந்தை

மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில், பெற்றோரின் உடல்களுடன் 3 வயது குழந்தை 11 மணி நேரம் அழுதபடி இருந்தது அனைவரின் நெஞ்சையும் பதற வைப்பதாக உள்ளது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 1:17 PM
மத்தியப் பிரதேசத்தில் பயங்கரம்
பகிர்:


போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில், பெற்றோரின் உடல்களுடன் 3 வயது குழந்தை 11 மணி நேரம் அழுதபடி இருந்தது அனைவரின் நெஞ்சையும் பதற வைப்பதாக உள்ளது.

சம்பவம் குறித்து குவாலியர் காவல்துறை கூறுகையில், வேலையில்லாமல் இருந்த சத்யேந்திர சௌஹானுக்கும், மனைவி அன்ஷுவுக்கும் இடையே கடும் சண்டை மூண்டுள்ளதுள்ளது. இதில் சத்யேந்திரா மனைவியைக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ராணுவ அதிகாரியான தனது சகோதரரின் துப்பாக்கியால் மனைவியை சுட்டுக் கொன்றுவிட்டு, தானும் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த 3 வயது குழந்தை அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்.

ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அந்த வீட்டில், தாத்தா பாட்டியும் இல்லாத நிலையில், பெற்றோர் மரணம் அடைந்துவிட, அவர்களது உடலுடன் 11 மணி நேரம் 3 வயது குழந்தை தன்னந்தனியாக தவித்துள்ளார்.

சனிக்கிழமை இரவு இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அன்ஷுவின் தந்தை தனது மகளுடன் பேச வேண்டும் என்று தொலைபேசியில் அழைக்க, தொலைபேசிய எடுத்த குழந்தை, "அம்மாவும் அப்பாவும் இறந்துவிட்டார்கள், எனக்கு மிகவும் பசிக்கிறது, சீக்கிரம் வாங்க தாத்தா" என்று சொல்ல, உடனடியாக காவல்துறைக்குத் தகவல் கொடுத்துவிட்டு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார் அபே படோரியா.

சம்பவம் நடந்தது குறித்து 3 வயது குழந்தை காவல்துறையிடம் முழுமையாக விளக்க, இரண்டு உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.