இந்தியா

70-ஆவது அரசியலமைப்பு நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் பங்கேற்பு

DIN

அரசியலமைப்பு நாளான நவம்பர் 26-ஆம் தேதி நாடாளுமன்ற மைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர். 

அப்போது பேசிய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், நாட்டின் 70-ஆவது அரசியலமைப்பு நாளான் இன்று இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் அனைத்து நாட்டு மக்களுக்கும் எனது வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது,

இன்று நமது நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டதன் 70-ஆவது ஆண்டு தினமாகும். அரசியலமைப்புச் சட்டம் நமது நாட்டின் புனித நூலாகும். அரசியலமைப்பு சட்டத்தின் மீதான நம்பிக்கையை மக்கள் ஒருபோதும் இழந்ததில்லை. நமது உரிமைகளையும், கடமைகளையும் சரியாக சுட்டிக்காட்டுவது தான் நமது அரசியலமைப்பாகும். இதுவே நமது அரசியலமைப்பின் தனிச் சிறப்பாகும். 

எனவே நமது அரசியலமைப்பின் படி நமது கடமைகளை சரியாக செய்வது குறித்து நாம் அனைவரும் சிந்திக்க வேண்டும். 26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களை இந்த தருணத்தில் நினைவு கூர கடமைப்பட்டுள்ளேன் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT