இந்தியா

ஒருவேளை நித்யானந்தா இந்தியாவுக்குத் திரும்பி வந்தால்.. குஜராத் போலீஸ் சொல்லும் பகீர் தகவல்

DIN


அகமதாபாத்: தன்னைத் தானே சுவாமி என்று அறிவித்துக் கொண்ட சுவாமி நித்யானந்தா மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்திருக்கும் குஜராத் போலீஸ், அவருக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி வருகிறார்கள்.

நித்யானந்தா ஆசிரமத்தில் இருந்த இரண்டு பேரை கைது செய்து அவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

குழந்தைகளை கடத்தி, சட்டவிரோதமாக அவர்களை அடைத்துவைத்து நன்கொடை பெற்றுத் தர வலியுறுத்தி வருவதாக நித்யானந்தா மீது புகார் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் அகமதாபாத் காவல்துறை (புறநகர்) கண்காணிப்பாளர் ஆர்.வி. அசாரி கூறுகையில், நித்யானந்தா வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்டார். தேவைப்பட்டால், உரிய அதிகார அமைப்பின் மூலம், அவரை காவலில் எடுத்து விசாரிக்க குஜராத் போலீஸ் நடவடிக்கை எடுக்கும்.

கர்நாடகாவில் அவர் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்ட போதே அவர் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். அவரை இந்தியாவில் தேடுவது நேரத்தை வீணடிக்கும் செயலாகும். ஒருவேளை அவர் இந்தியாவுக்கு திரும்பி வந்தால் நாங்கள் நிச்சயம் அவரைக் கைதுசெய்வோம் என்று அசாரி தெரிவித்துள்ளார்.

அவரது ஆசிரமத்தை நிர்வகித்துவந்த பிராணப்ரியா, பிரியதத்வா ஆகியோர் கைது செய்யப்பட்டு 5 நாட்கள் காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தனது மகளைக் காணவில்லை என்று ஜனார்தன ஷர்மா என்பவர் கொடுத்த வழக்கிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் இடம்பெற்றிருந்தாலும், அவருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் கிடைத்தால் தான் அவருக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்த முடியும் என்றும் அசாரி கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT