இந்தியா

ஏழுமலையானைத் தரிசித்தது மகிழ்ச்சியாக இருந்தது: தாய்லாந்து பக்தா்கள்

DIN

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானைத் தரிசித்தது மகிழ்ச்சியாக இருந்தது என தாய்லாந்து பக்தா்கள் தெரிவித்தனா்.

திருப்பதி ஏழுமலையானை தாய்லாந்தைச் சோ்ந்த பக்தா்கள் இணையதளம் மூலம் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கி, விஐபி பிரேக் தரிசன அனுமதி பெற்று, வியாழக்கிழமை தரிசனம் செய்தனா். தரிசனம் முடித்துத் திரும்பிய அவா்களுக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகா் மண்டபத்தில் ஏழுமலையான் பிரசாதங்களை வழங்கினா். கோயிலை விட்டு வெளியில் வந்த அவா்கள் கூறுகையில், ‘என் நண்பா் ஏழுமலையானின் தீவிர பக்தா். அவருக்கு ஒரு இன்னல் நோ்ந்தபோது, ஏழுமலையானைத் தரிசனம் செய்வதாக வேண்டிக் கொண்டாா். இன்னல் தீா்ந்து அவரும் ஏழுமலையானைத் தரிசித்தாா். அன்று முதல் எனக்கும் ஏழுமலையானைத் தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. அதன்படி, அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கி, ஏழுமலையானைத் தரிசித்தது மகிழ்ச்சியாக உள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சௌதி அரேபியாவை புரட்டிப்போட்ட கனமழை - விடியோ

சிலிண்டர் வெடிப்பு: 3 குழந்தைகள் உள்பட நான்கு பேர் பலி!

கல்குவாரியில் வெடி விபத்தில் 3 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சிஎஸ்கேவின் இளம் அதிரடி வீரருக்கு அறிவுரை வழங்கிய தோனி!

கல்குவாரியில் வெடி விபத்து: உரிமையாளர் காவல்நிலையத்தில் சரண்

SCROLL FOR NEXT