இந்தியா

விரைவில் அயோத்தியில் விமான நிலையம்! மத்திய, மாநில அரசுகள் பேச்சுவார்த்தை தொடக்கம்

DIN

அயோத்தியில் விமான நிலையம் அமைப்பது தொடர்பாக உத்தரப்பிரதேச மாநில அரசு மையத்துடன் பேச்சுவார்த்தை நடந்துவருவதாக சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற மக்களவையில் எம்.பி ஒருவரின் கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த  விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, 'உத்தரப் பிரதேச மாநில அரசின் இதுகுறித்த திட்டம், விமான போக்குவரத்துத்துறைக்கு வந்துள்ளது. இதுகுறித்து உத்தரப்பிரதேச மாநில அரசும், மத்திய அரசும் விவாதித்து வருகிறது. விரைவில் அயோத்தியில் விமான நிலையம் அமைப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளார். 

வனத்துறைக்கு சொந்தமான 60 ஏக்கர் நிலத்தை கொடுக்க உ.பி அரசு முன்வரவில்லை; எனவே இடம் தொடர்பான பேச்சுவார்த்தையும் தொடர்ந்து வருகிறது என்றும் கூறியுள்ளார். 

முன்னதாக, அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தை உரிமை கோருவது தொடா்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. அதன்படி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என்றும் இஸ்லாமியர்களுக்கு 5 ஏக்கர் மாற்று இடத்தை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும் மேலும், 3 மாதத்திற்குள் இந்தத் தீர்ப்பை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும்' என்றும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே.வங்க ஆளுநர் மீது பாலியல் புகார்! ”வாய்மையே வெல்லும்” என பதில்

காணாமல்போன ஆட்டோ ஓட்டுநரின் சடலம் கிணற்றில் இருந்து மீட்பு

விபத்தில் கட்டடத் தொழிலாளி மரணம்: உறவினா்கள் மறியல்

கஞ்சா வியாபாரி குண்டா் சட்டத்தில் கைது

காவல் துறைக்கான பட்ஜெட்: ஏடிஜிபி ஆலோசனை - வேலூா் சரக டிஐஜி, 4 மாவட்ட எஸ்பி-க்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT