இந்தியா

'கிரீடத்தில் உள்ள தங்கநகை போன்றது'- சென்னை ஐ.சி.எப்-யை மூடும் திட்டம் உள்ளதா? என்ற கேள்விக்கு மத்திய அரசு பதில்!

DIN

சென்னை பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலையை மூடும் திட்டம் இல்லை என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் சென்னை ஐ.சி.எப் ரயில் பெட்டிகள் தயாரிப்பதில் முதன்மையானதாக விளங்குகிறது. 1952ல் உருவாக்கப்பட்டு 1955 முதல் செயல்பாட்டிற்கு வந்த ஐ.சி.எப்-இல் தற்போது வருடத்திற்கு 2,000க்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்படுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், சென்னை பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை மூடும் திட்டம் ஏதேனும் உள்ளதா என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்தார்.

அப்போது அவர், 'சென்னை ரயில் பெட்டித் தொழிற்சாலையை மூடும் திட்டம் என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. பெரம்பூர் ஐ.சி.எப் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளது. இங்குள்ள பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் இணைந்து பல சாதனைகளைப் புரிந்துள்ளனர். சமீபத்தில் அதிவேக ரயில் 'பாரத் ரயில்' இங்குதான் தயாரிக்கப்பட்டது. எனவே, ஐசிஎப் நிறுவனம் கிரீடத்தில் உள்ள நகை போன்றதாகும். அதனை மூடும் திட்டம் எப்போதும் மத்திய அரசுக்கு இல்லை. 

இதேபோன்று இந்தியாவில் புல்லட் ரயில் திட்டங்களும் பரிசீலனையில் உள்ளன. புல்லட் ரயில் திட்டம் விரைவில் இந்தியாவில் செய்லபடுத்தப்படும். மேலும், நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் பாதைகளும் மின்மயமாக்கப்படும்' என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்து நிகழ்ந்த கல் குவாரியிருந்து 2 டன் வெடி பொருள்கள் அகற்றம்

நோயைவிட வேகமாகப் பரவும் வதந்தி!

திருப்பூரில் நாளை புற்றுநோய் விழிப்புணா்வு சைக்கிள் பேரணி

திருவிழாவில் கோஷ்டி மோதல்: 10 பேருக்கு கத்திக்குத்து

ராமநாதபுரம் மாவட்ட சிறைகளில் நீதிபதி, ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT