மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் 
இந்தியா

மகாத்மா காந்தி 150-ஆவது பிறந்த தினம்: பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை

மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள் அக்டோபர் 2-ஆம் தேதி  நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. 

DIN

மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாள் நாடு முழுவதும் புதன்கிழமை கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு ராஜ் கட் பகுதியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதேபோன்று முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த நாளும் இன்று கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி விஜய் கட் பகுதியில் அமைந்துள்ள லால் பகதூர் சாஸ்திரி நினைவிடத்தில் அவரது மகன் அனில் சாஸ்திரி, பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - பாண்டிராஜ் கூட்டணி!

வைரலாகும் பாக்கியலட்சுமி தொடரின் இறுதி நாள் காட்சி புகைப்படம்!

சாகப் போகிறேன் இல்லையென்றாலும் கொன்றுவிடுவார்கள்: கேரள கர்பிணியின் கடைசி பதிவு!

‘செத்த பொருளாதாரம்’.. கொன்றதே மோடிதான்! - ராகுல் காட்டம்

டிசிஎஸ் சிஇஓ கீர்த்திவாசனின் ஊதியம் எவ்வளவு தெரியுமா?

SCROLL FOR NEXT