முகப்பு
இந்தியா

எந்த பிரச்னைகளுக்கும் மகாத்மா காந்தியின் கொள்கைகள் தீர்வு தருகின்றன: சபர்மதி ஆசிரமத்தில் மோடி பேச்சு 

எந்த பிரச்னைகளுக்கும் மகாத்மா காந்தியின் கொள்கைகள் தீர்வு தருகின்றன என்று குஜராத்  சபர்மதி ஆசிரமத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:16 AM
பிரதமர் மோடி (கோப்புப்படம்)
பகிர்:

சபர்மதி: எந்த பிரச்னைகளுக்கும் மகாத்மா காந்தியின் கொள்கைகள் தீர்வு தருகின்றன என்று குஜராத்  சபர்மதி ஆசிரமத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாள் புதனன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தில்லியில் காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மாலையில் குஜராத் மாநிலம் சபர்மதியில் உள்ள காந்தியின் ஆசிரமத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார்.  பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியின் பேசிய அவர், உலகில் உள்ள எந்த பிரச்னைகளுக்கும் மகாத்மா காந்தியின் கொள்கைகள் தீர்வு தருகின்றன. உலகளவில் நிகழும் பல சாதகமான மாற்றங்களில் இந்தியா முன்னிலையில் இருக்கிறது' என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.