காந்தி நினைவு நாணயத்தை வெளியிட்ட மோடி 
இந்தியா

மகாத்மா காந்தி பிறந்தநாள்: ரூ.150 நாணயத்தை வெளியிட்ட மோடி  

நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ரூ.150 மதிப்பு நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

DIN

அகமதாபாத்: நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ரூ.150 மதிப்பு நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.

நமது தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்தநாள் புதனன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

தில்லியில் காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில், பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மாலையில் குஜராத் மாநிலம் சபர்மதியில் உள்ள காந்தியின் ஆசிரமத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார்.

அதையடுத்து அகமதாபாத்தில்நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் காந்தியின் 150-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ரூ.150 நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.     

இது பொதுப்பயன்பாட்டிற்கு அல்லாமல் சேகரிப்பாளர்களக்கு மட்டுமானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் ஜேட்லி மீதான குற்றச்சாட்டு: ராகுலுக்கு பாஜக முதல்வா்கள் கண்டனம்

பிகாா்: பலத்த மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு; மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

ஆற்று நீரில் மூழ்கி 2 போ் உயிரிழப்பு

சென்னையில் 4 இடங்களில் ‘முதல்வா் படைப்பகங்கள்’!

நவகன்னிகை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

SCROLL FOR NEXT