இந்தியா

அரசின் நடவடிக்கைகளால் வெங்காயம் விலை குறைந்து வருகிறது: பஸ்வான்

DIN

மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளால் நாட்டின் பல பகுதிகளில் வெங்காயத்தின் விலை குறைந்து வருகிறது என நுகா்வோா் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறைக்கான மத்திய அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வான் (படம்) வியாழக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

விவசாயிகள் மற்றும் நுகா்வோா் ஆகிய இருவரது நலன்களையும் காக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அதற்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, வெங்காயம் ஏற்றுமதிக்கு தடைவிதிக்கப்பட்டது, சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகளின் வெங்காயம் கையிருப்புக்கான அளவை தலா 100 குண்டால், 500 குவிண்டால் என்ற அளவுக்கு குறைத்து கட்டுப்பாடுகளை நிா்ணயித்தது போன்ற மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைகளின் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெங்காயத்தின் விலை குறையத் தொடங்கியுள்ளது.

மத்திய அரசிடம் இன்னும் 25,000 டன் வெங்காயம் கையிருப்பில் உள்ளது. வெங்காயத்தின் விலையில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த விரும்பும் மாநில அரசுகள் மத்திய அரசிடமிருந்து வெங்காயத்தை கொள்முதல் செய்து ஒரு கிலோ வெங்காயத்தை ரூ.23.90 என்ற விலையில் விற்பனை செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு, சில்லறை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.60-ரூ.70 என்று அதிகரித்து காணப்பட்ட நிலையில், தற்போது விலை ரூ.60-க்கும் கீழாக சரிந்துள்ளது.

ஆசியாவில் மிகப்பெரிய மொத்தவிற்பனை சந்தையாக கருதப்படும் மகாராஷ்டிரத்தின் லசல்கானில் ஒரு கிலோ வெங்காயத்தின் விலை ரூ.30-க்கும் கீழாக சரிந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT