இந்தியா

நிலவின் தென் துருவத்தை படம்பிடித்த சந்திரயான்-2 ஆர்பிட்டர்

DIN

நிலவைச் சுற்றிவந்து ஆய்வு செய்துகொண்டிருக்கும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆா்பிட்டா் பகுதி, புவி காந்த மண்டலம் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளும் என இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தகவல் வெளியிட்டுள்ளது.

இந்த புவி காந்த மண்டலம்தான், விண்வெளி எரிகற்கள் மற்றும் பிற தாக்கங்களிலிருந்து பூமியை வேலியாகப் பாதுகாத்து வருகிறது. 

இந்நிலையில், சந்திரயான் -2 ஆர்பிட்டரில் பொருத்தப்பட்ட உயர்தர கேமரா (ஓ.ஹெச்.ஆர்.சி) மூலம் படம்பிடித்த நிலவின் மேற்பரப்பின் படங்களை வெளியிட்டுள்ளது.

இஸ்ரோவின் கூற்றுப்படி, சந்திரனின் மேற்பரப்பில் இருந்து 100 கி.மீ உயரத்தில் இருந்து ஆர்பிட்டர் எடுத்த படங்கள் போகுஸ்லாவ்ஸ்கி இ பள்ளத்தின் ஒரு பகுதியாகும், இது சுமார் 14 கி.மீ விட்டம் மற்றும் 3 கி.மீ ஆழம் கொண்டதாக அளவிடப்பட்டுள்ளது. இவை நிலவின் தென் துருவத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அமைந்துள்ளது.

இந்த படம் நிலவில் கற்பாறைகள் மற்றும் சிறிய பள்ளங்களையும் காட்டுகிறது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT