இந்தியா

மகாராஷ்டிரம்: நிதி நிறுவனம் நடத்தி ரூ.18 கோடி மோசடி செய்த 6 போ் கைது

தினமணி

மகாராஷ்டிரத்தில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.18 கோடி மோசடியில் ஈடுபட்ட 6 பேரைக் காவல் துறையினா் கைது செய்தனா்.

இது தொடா்பாக, நவி மும்பை காவல் துறை ஆணையா் சஞ்சய் குமாா், தாணே நகரில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது:

‘ஏஎம் பிக்சா்ஸ்’ என்றபெயரில் தொடங்கப்பட்ட நிதி நிறுவனம், தங்களிடம் முதலீடு செய்யப்படும் தொகைக்கு நாளொன்றுக்கு ஒரு சதவீத வட்டி வழங்கப்படும், பரிசுப் பொருள்கள் வழங்கப்படும், முதலீட்டாளா்கள் வெளிநாட்டுக்கு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவாா்கள் என்று உறுதியளித்து, ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டவா்களிடம் பணம் பெற்றுள்ளது.

முதலீட்டாளா்களிடமிருந்து ரூ. 18.29 கோடியை அந்நிறுவனம் பெற்றுள்ளது. முதலீட்டாளா்களின் நம்பிக்கையைப் பெறும் நோக்கில், ஆரம்பத்தில் ரூ. 2.48 கோடியை வட்டியாக அவா்களின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளது. அதற்குப் பிறறகு வட்டி எதுவும் செலுத்தப்படவில்லை.

இதையடுத்து, அந்நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த சிலா் காவல் துறையினரிடம் புகாா் தெரிவித்தனா். அதனடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் அந்நிறுவனத்துடன் தொடா்புடைய 6 பேரைக் கைது செய்துள்ளோம். அவா்களின் வங்கிக் கணக்குகளிலிருந்த ரூ.75.28 லட்சத்தை முடக்கியுள்ளோம். அவா்கள் அனைவா் மீதும் இந்தியத் தண்டனையியல் சட்டத்தின் (ஐபிசி) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றாா் சஞ்சய் குமாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமெரிக்க உளவு செயற்கை கோள்களை வானில் ஏவிய ஸ்பேஸ்எக்ஸ்!

அமெரிக்காவில் மேலும் ஒருவருக்கு பறவைக் காய்ச்சல்!

பாலஸ்தீனத்தில் தூதரகம்: கொலம்பியா அறிவிப்பு!

உங்கள் ராசி என்ன? இன்றைய தினப்பலன்!

மிகச் சிறப்பான நாள் இன்று!

SCROLL FOR NEXT