இந்தியா

50-ஆவது சர்வதேச திரைப்பட விழா குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் முக்கிய தகவல்

DIN

உலக சினிமா ரசிகர்களுக்காக நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் திரைப்பட விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அவ்வகையில் சென்னை, திருவனந்தபுரம் மற்றும் மும்பை நகரங்களில் நடைபெறும் திரைப்பட விழாக்கள் மிகவும் பிரபலம்.

இந்நிலையில், அனைத்து திரைப்பட விழாக்களிலும் முக்கியமானதாக கோவாவில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழா நடைபெறும். இதில் திரை ஆர்வலர்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபல திரைப்பட வல்லுநர்களும் கலந்துகொள்வார்கள்.

இதுதொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில், 

50-ஆவது சர்வதேச திரைப்பட விழா கோவாவில் நம்பர் 20-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. பல்வேறு இந்திய மொழிகளைச் சேர்ந்த 26 திரைப்படங்கள் திரையிடப்படும். 

அதுமட்டுமல்லாமல் 50 ஆண்டுகளுக்கு முன் வெளியான திரைப்படங்களும் திரையிடப்பட உள்ளன என்று தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT