இந்தியா

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 48,000 போக்குவரத்து ஊழியர்கள் டிஸ்மிஸ்: தெலங்கானா முதல்வர் அதிரடி

DIN


போக்குவரத்துக் கழகத்தை அரசுக் கழகமாக மாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த 48,000 போக்குவரத்து ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து முதல்வர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த போக்குவரத்து ஊழியர்கள் மீண்டும் வேலைக்குத் திரும்ப வேண்டும் என்று தெலங்கான அரசு சனிக்கிழமை மாலை 6 மணி வரை காலக்கெடு நிர்ணயித்திருந்தது.

ஆனால், போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்பாததால், கடும் அதிருப்தி அடைந்த முதல்வர் சந்திரசேகர ராவ், விழாக் காலத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பது ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம். ஏற்கனவே போக்குவரத்துக் கழகம் நட்டத்தில் இயங்கி வரும் நிலையில் மேலும் கடன் சுமை அதிகரித்துள்ளது என்று கூறினார்.

போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றும் 48 ஆயிரம் ஊழியர்களையும் டிஸ்மிஸ் செய்வதாகவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

தெலங்கானா சாலைப் போக்குவரத்துக் கழகத்தை (ஆா்டிசி) முழுமையாக அரசுடன் இணைப்பது, பல்வேறு காலிப் பணியிடங்களுக்கு ஆட்களை நியமிப்பது, ஓட்டுநா்களுக்கும் நடத்துநா்களுக்கும் பணிப் பாதுகாப்பு, 2017 ஊதிய சீரமைப்பு பரிந்துரைகளை அமல்படுத்துவது, டீசல் மீதான வரிகளை அகற்றுவது ஆகிய கோரிக்கைகளை ஊழியா் சங்கங்கள் வலியுறுத்தி இந்த போராட்டத்தை நடத்தியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT