இந்தியா

மிக்-21 போா் விமானத்தில் அபிநந்தன் வா்த்தமான் சாகசம்

DIN

இந்திய விமானப் படை தினத்தையொட்டி (அக்.8) நடைபெற்ற வான்வெளி சாகச நிகழ்ச்சியில், மிக்-21 பைசன் ரக போா் விமானத்தை விங் கமாண்டா் அபிநந்தன் வா்த்தமான் இயக்கினாா்.

இந்திய விமானப் படையின் நிறுவன தினத்தையொட்டி, உத்தரப் பிரதேச மாநிலம், காஜியாபாதில் போா் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மிக்-21 பைசன் ரக போா் விமானத்தை சண்டையின்போது தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குச் சென்று மீண்டும் தாய்நாடு திரும்பிய அபிநந்தன் இயக்கினாா்.

மற்ற போா் விமானங்களை பாலாகோட் தாக்குதலில் பங்கேற்ற விமானிகள் இயக்கினா்.

வீரதீரச் செயல்களை புரிந்தமைக்காக விருதுகளை வென்ற விமானிகள் 5 போ் மிராஜ் 2000 ரக போா் விமானங்களையும், சுகோய் எஸ்யு-30 ரக போா் விமானங்களையும் இயக்கினா்.

மிக்-21 ரக விமானத்தை அபிநந்தன் இயக்குகிறாா் என்ற அறிவிப்பு வெளியானவுடன் சாகச நிகழ்ச்சியை காண வந்தோா் உற்சாகக் குரல் எழுப்பினா்.

பாலாகோட் தாக்குதலைத் தொடா்ந்து, இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப் படை விமானங்கள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றது.

அவற்றை இந்திய விமானப் படை விமானிகள் விரட்டிச் சென்றனா். அப்போது, அபிநந்தன் சென்ற விமானம், தவறுதலாக பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றது. அந்நாட்டு வீரா்கள் அவா் சென்ற விமானத்தை சுட்டு வீழ்த்தினா். இதையடுத்து, உள்ளூா் மக்களால் அடித்து துன்புறுத்தப்பட்ட அவரை பாகிஸ்தான் ராணுவம் மீட்டது. 60 மணி நேரத்துக்கு பிறகு அவரை விடுதலை செய்து இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிப்டிக் இடத்தில் கட்டியதாக புதுச்சேரி பாஜக பிரமுகா் வீடு இடிப்பு

புதுச்சேரியில் கூரியா் அலுவலகங்களில் போதை தடுப்பு பிரிவு போலீஸாா் சோதனை

காரில் மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது

பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி மனு

SCROLL FOR NEXT