பாஜக எம்.எல்.ஏ மதன் திலாவர் 
இந்தியா

பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தினால் கை, கால் எல்லாம் விளங்காமல் போக வேண்டும்: பாஜக எம்.எல்.ஏவின் விபரீத பிரார்த்தனை 

பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துபவர்கள் கை, கால் எல்லாம் விளங்காமல் போக வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ ஒருவர் கடவுள் துர்கையிடம் பிரார்த்தனை நடத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

IANS

ஜெய்ப்பூர்: பிளாஸ்டிக்கைப் பயன்படுத்துபவர்கள் கை, கால் எல்லாம் விளங்காமல் போக வேண்டும் என்று ராஜஸ்தான் மாநில பாஜக எம்.எல்.ஏ ஒருவர் கடவுள் துர்கையிடம் பிரார்த்தனை நடத்தியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ராம்கஞ்ச் மண்டி தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி எம்.எல்.ஏவாக இருப்பவர் மதன் திலாவர். இவர் விஜயதசமி தினத்தன்று கடவுள் துர்க்கையிடம் பிரார்த்தனை செய்யும் விடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

அந்த விடியோவில் கைகளை கூப்பியபடி கடவுள் துர்க்கையிடம் அவர் வேண்டுவதாவது:

ஓ துர்கை அம்மனே!  பிளாஸ்டிக் கப்புகளில் டீ அருந்துபவர்கள் மற்றும் சுற்றுப்புறத்தை அசுத்தப்படுத்துபவர்களுக்கு நோயை உண்டாக்கு. அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் கை மற்றும் கால்களை முடமாக்கு, அவர்களுக்கு துரதிர்ஷ்டம் உண்டாவதை உறுதி செய். அவர்கள் வீட்டிற்கு ஒரு போதும் பணம் வந்து சேராமலிருப்பதை உறுதி செய்!

நமது சுற்றுப்புறத்திலிருந்து அசுத்தங்கள் நீக்கப்பட்டால், அனைவருமே மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள் என்பதைக் கூற விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் பிரார்தித்துள்ளார்.

அவரது இந்தக் கருத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில அளவிலான ஜூடோ போட்டியில் வென்ற மாணவா்களுக்குப் பாராட்டு

குற்ற வழக்குகளில் தொடா்புடையவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை

பழனியில் கூடுதல் தலைமைச் செயலா் ஆய்வு

லஞ்சம்: வேளாண்மை உதவி இயக்குநா் கைது

புதிய துணை மின் நிலையங்கள் மூலம் சீரான மின் விநியோகம்: அமைச்சா் அர.சக்கரபாணி தகவல்

SCROLL FOR NEXT