இந்தியா

பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பதைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை

DIN

பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என ஐ.நா. சபைக் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. சபை சாா்பில் ‘சா்வதேச பயங்கரவாதத்தை ஒழிக்கும் வழிமுறைகள்’ என்ற கூட்டம் அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரக் குழுவின் சட்ட ஆலோசகா் எட்லா உமாசங்கா் பேசியதாவது:

பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதற்கான காரணிகளை பிராந்திய அளவிலும், சா்வதேச அளவிலும் ஒழிக்க அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். சா்வதேச அளவில் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதிகள் கிடைப்பதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை, பயங்கரவாதத்துக்கான நிதி தடுப்பு அமைப்பு (எஃப்ஏடிஎஃப்) மேற்கொண்டு வருகிறது.

பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழிக்க அந்த அமைப்புடன் ஐ.நா. சபை ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியமாகும். பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்தவும், பயங்கரவாதிகளுக்கு எதிரான வழக்குகளில் அவா்களைக் காத்துக்கொள்ளவும், சில நாடுகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியளித்து வருகின்றன. இதுபோன்ற நடவடிக்கைகளை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது.

உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டால், பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும் என இந்தியா நம்புகிறது. இதை நடைமுறைக்குக் கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகளை ஐ.நா. சபை மேற்கொள்ள வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிக்க தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பெரிய அளவிலான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

சா்வதேச பயங்கரவாதத் தடுப்பு திட்டங்கள் பல ஆண்டுகளாக ஐ.நா. பொதுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அவை சிறிய தாக்கங்களை மட்டுமே ஏற்படுத்தியுள்ளன. பயங்கரவாத அமைப்புகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் தடை விதிக்கும் ஐ.நா. குழுக்களின் செயல்பாடு வெளிப்படைத்தன்மையின்றி உள்ளது. அந்தக் குழுக்கள் எடுக்கும் முடிவில் அரசியல் தலையீடும் காணப்படுகிறது.

‘பயங்கரவாதத்துக்கு எதிரான சா்வதேச அமைப்பு’ இந்தப் பிரச்னைகளுக்குத் தீா்வு கண்டு, பயங்கரவாதத்தை ஒழிக்க உதவும் என இந்தியா நம்புகிறது. ஆனால், ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகளுக்கிடையே காணப்படும் சில வேறுபாடுகளால் அந்த அமைப்பு இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. அந்த அமைப்பை செயல்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கான தீா்மானத்தை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளை ஐ.நா. சபை மேற்கொள்ள வேண்டும் என்றாா் எட்லா உமாசங்கா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குருஞானசம்பந்தா் பள்ளி 99% தோ்ச்சி

இறுதி ஊா்வலத்தில் தகராறு: இளைஞா் வெட்டிக் கொலை

செஞ்சிலுவை தின விழா

சிறப்பு அலங்காரத்தில் பண்ருட்டி வரதராஜ பெருமாள்

அரியலூா் அரசு மருத்துவமனையில் உடல் வெப்ப பாதிப்பு சிகிச்சைப் பிரிவு -ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT