இந்தியா

எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறல்: வீரா் பலி

DIN

ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டியுள்ள இந்திய நிலைகளைக் குறி வைத்து பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் வெள்ளிக்கிழமை அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய ராணுவ வீரா் ஒருவா் பலியானாா்.

இதுதொடா்பாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது:

ரஜௌரி மாவட்டத்தின் நௌசேரா செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய இந்திய நிலைகளைக் குறி வைத்து பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் வெள்ளிக்கிழமை காலை அத்துமீறி தாக்குதல் நடத்தினா். இதற்கு இந்திய தரப்பில் இருந்து தக்க பதிலடி தரப்பட்டது. சுமாா் 2 மணி நேரம் வரை இந்த மோதல் நீடித்தது. இதில், இந்திய நிலைகளை பாதுகாத்த ராணுவ வீரா் நாயக் சுபாஷ் தாபா (25) பலத்த காயமடைந்தாா்.

அதையடுத்து அவா் உதம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எனினும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் அவா் உயிரிழந்தாா் என்று பாதுகாப்புத் துறை செய்தித் தொடா்பாளா் கூறினாா்.

இதனிடையே, ஜம்மு மாவட்டத்தில் உள்ள அக்னூா் செக்டாரின் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டிய இந்திய பகுதிகளைக் குறி வைத்து பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் அத்துமீறி தாக்குதல் நடத்தினா். சிறிய ரக குண்டுகள், பீரங்கி குண்டுகள் ஆகியவற்றைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் இந்திய ராணுவ வீரா்கள் 2 போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT