இந்தியா

தெலங்கானா போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: போலி வாட்ஸ்ஆப் ஆடியோ பதிவால் பரபரப்பு

DIN

தெலங்கானாவில் போக்குவரத்து ஊழியர்கள் மேற்கொண்டு வரும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக வாட்ஸ்ஆப்பில் போலியான ஆடியோப் பதிவு பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அதில் இந்தப் போராட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், முதல்வர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அடையாளம் தெரியாத நபர் எழுப்பிய கேள்வியை விமர்சிக்கும் விதமாக அம்மாநில முதல்வர் அலுவலக ஊழியர் ஒருவர் தொலைபேசி உரையாடல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக தெலங்கானா முதல்வர் அலுவலகம் சார்பில் ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் அன்ஜனி குமார் கூறியதாவது, ஊடகங்களிலும், சமூகவலைதளங்களிலும், வாட்ஸ்ஆப்பிலும் பரவிய போலி ஆடியோப் பதிவு தொடர்பாக முதல்வர் அலுவலகத்தில் இருந்து புகார் அளித்துள்ளனர். 

இந்த புகார் மீது கிரைம் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த குற்றச்செயலுக்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இது சிலரால் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

கொல்லாத கண்ணாரா - விடியோ பாடல்

‘பாலிவுட் நடிகர்களில் அதிகம் மதிக்கப்படும் இரண்டாவது நபர் நான்’ : கங்கனாவின் வைரல் விடியோ!

பிரஜ்வல் பாலியல் வன்கொடுமை: பாதிக்கபட்டோர் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

படிக்காத பக்கங்கள் படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT