முகப்பு
இந்தியா

அயோத்தியில் பிறந்தது ராமர் தான்; முகம்மது நபிகள் இல்லை என்பது முஸ்லீம் சகோதரர்களுக்கே தெரியும்: பாபா ராம்தேவ்

அயோத்தியில் பிறந்தது ராமர் தான்; முகம்மது நபிகள் இல்லை என்பது முஸ்லீம் சகோதரர்களுக்குத் தெரியும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். 

Updated On : 31 ஜனவரி, 2024 at 10:25 AM
பகிர்:

அயோத்தியில் பிறந்தது ராமர் தான்; முகம்மது நபிகள் இல்லை என்பது முஸ்லீம் சகோதரர்களுக்குத் தெரியும் என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார். 

தில்லியில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய யோகா குரு பாபா ராம்தேவ், "அயோத்தி விவகாரம் விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது. அயோத்தியில் ராமர்  கோவில் கட்டப்படுவது உறுதி. 

ராமர் தான் அயோத்தியில் பிறந்தார்; மாறாக கடவுளின் கடைசி தூதர் என்று அழைக்க்கப்படும் முகம்மது நபிகள் அல்ல என்பது முஸ்லீம் சகோதரர்களுக்கும், இந்த நாட்டில் உள்ள அனைவருக்குமே தெரியும். எனவே அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும்' என்று தெரிவித்தார். 

Advertisement

மேலும், 'ஹரியாணா மற்றும் மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல்களில் மக்கள் பாஜகவுக்கு ஆதரவளிக்க வேண்டும்.மாநிலத்திலும், மத்தியிலும் நிலையான அரசாங்கம் தேவை. நிலையான ஒரு ஆட்சி இருந்தால் மட்டுமே உலக அளவிலும் இந்தியாவுக்கென தனி அதிகாரம் கிடைக்கும். 

ஹரியாணா மற்றும் மகாராஷ்டிராவில் மக்கள் நல்ல ஒரு அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஹரியாணா முதல்வர் மனோகர் லால் கட்டர்  ஒரு நல்ல மனிதர்; நேர்மையானவர்; ஊழலை பொறுத்துக்கொள்ள மாட்டார்' என்று கூறினார். 

தொடர்ந்து, 'காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் மூலமாக, சர்தார் வல்லபாய் படேலுக்கு பிறகு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, 'ஒரே தேசம்; ஒரே அரசியலமைப்பு; ஒரே கொடி' என்ற நோக்கியில் தைரியத்துடன் பணியாற்றி வருகின்றனர். மக்கள் பாஜக அரசுக்கு தொடர்ந்து அங்கீகாரம் அளித்து வருகின்றனர்' என்று தெரிவித்தார். 

மேலும், நாட்டின் ஒற்றுமையை குலைக்கும் தீவிரவாதம் அடியோடு வேரறுக்கப்பட வேண்டும் என்று கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments