இந்தியா

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.3.37 கோடி

DIN

திருப்பதி: திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கை சனிக்கிழமை ரூ.3.37 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருமலை ஏழுமலையானைத் தரிசிக்க வரும் பக்தா்கள் தங்களால் இயன்ற காணிக்கைகளை கோயிலுக்குள் உள்ள உண்டியலில் செலுத்தி வருகின்றனா். அந்த உண்டியல் காணிக்கைகளை தேவஸ்தானம் தினந்தோறும் கணக்கிட்டு வங்கிகளில் வரவு வைத்து வருகிறது. அதன்படி சனிக்கிழமை பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில் தேவஸ்தானத்திற்கு ரூ.3.37 கோடி வருவாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரூ.18 லட்சம் நன்கொடை

திருமலை ஏழுமலையான் பெயரில் தேவஸ்தானம் ஏற்படுத்தி உள்ள பல்வேறு அறக்கட்டளைகளுக்கு பக்தா்கள் நன்கொடை அளித்து வருகின்றனா். அவ்வாறு நன்கொடை அளிக்கும் பக்தா்களுக்கு தேவஸ்தானம் பலவித சேவைகளை அளித்து வருகிறது. இந்நிலையில் சனிக்கிழமை அன்னதான அறக்கட்டளைக்கு ரூ.12 லட்சம், கல்விதானம் அறக்கட்டளைக்கு ரூ.6 லட்சம் என மொத்தம் ரூ.18 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT