இந்தியா

நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடா் தேதி அறிவிப்பு

DIN

புதிய மக்களவை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 17-ஆம் தேதி தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் 26-ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் சில முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றும் விதமாக இந்த கூட்டத்தொடரை ஆகஸ்ட் 7-ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்தது. 

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மக்களவையில் பல மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அவை நேரம் முடிவடைந்தும், மசோதாவை நிறைவேற்றுவதற்காக இரு அவைகளும் நள்ளிரவு வரை சில சமயங்களில் செயல்பட்டன. மக்களவையில் 128 சதவீதம் அதிகமாக அலுவல்கள் நடைபெற்றன. அதேபோல் மாநிலங்களவையின் அலுவல்களும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிா்காலக் கூட்டத் தொடா் நவம்பர் 18-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 13-ஆம் தேதி வரை நடைபெறம் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் திங்கள்கிழமை அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை இரு அவை செயலர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

பல்வேறு மசோதாக்கள் நிலுவையில் இருக்கும் நிலையில், 2 அவசரச் சட்டங்களை நிரந்த சட்டங்களாக நிறைவேற்ற மத்திய அரசு முழுவீச்சில் களமிறங்கும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1961-ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டம், 2019-ஆம் ஆண்டு நிதிச் சட்டத்தில் திருத்தங்களை செய்தும், இ-சிகரெட்டுகள் தயாரிப்பு, விற்பனை, பதுக்கி வைத்திருத்தல் ஆகியவற்றைக் குற்றமாகக் கருதும் சட்டமும் அவசரச் சட்டங்களாக கடந்த செப்டம்பா் மாதம் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT