இந்தியா

ஹரியாணாவில் பாஜகவுக்கு பின்னடைவு: மாநிலத் தலைவர் சுபாஷ் பராலா ராஜிநாமா!

DIN


ஹரியாணாவில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாது என்பது உறுதியானதையடுத்து, அம்மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

மகாராஷ்டிரா, ஹரியாணா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் இன்று காலை தொடங்கியது. இதில், மகாராஷ்டிர மாநிலத்தில் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றன. ஆனால், ஹரியாணா மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே இழுபறி நீடித்து வருகிறது.

மொத்தமுள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளில் பிற்பகல் 2.45 மணி நிலவரப்படி பாஜக 40 இடங்களிலும், காங்கிரஸ் 32 இடங்களிலும், பிற கட்சிகள் 18 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. 

இதில், பாஜக மாநிலத் தலைவர் சுபாஷ் பராலாவே தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக ஜனதா கட்சி வேட்பாளர் தேவிந்தர் சிங் பாப்லியைவிட சுமார் 25,000 வாக்குகள் குறைவாகப் பெற்று தோல்வியடைந்துள்ளார். குறைந்தபட்சம் 8 அமைச்சர்கள் மற்றும் 15-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் பின்னடைவைச் சந்தித்துள்ளனர்.

அதேசமயம், ஜனநாயக ஜனதா கட்சி 9 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருவதால், அது ஆட்சியைத் தீர்மானிக்கும் கட்சியாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT